மாணவியை கடத்திய பெயின்டர் போக்சோவில் கைது

திருப்புத்தூர், ஜன. 28:  திருப்புத்தூர் அருகே ஆலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் திரவியம். இவரது மகன் கிளின்டன் (20). பெயின்டர். இவர் இதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2  மாணவி திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த டிச.27ம் தேதி மாணவியை பாண்டிச்சேரிக்கு அழைத்து சென்றுள்ளார். போலீஸ் விசாரணையில், கிளின்டன் மாணவியுடன் பாண்டிச்சேரியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியது தெரியவந்தது.  போலீசார் இருவரையும் ஆலங்குடி அழைத்து வந்தனர். மைனர் பெண் என்பதால் மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் கிளின்டனை கைது செய்தார்.

Related Stories:

>