×

நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் தொடரும் விபத்து

பரமக்குடி, ஜன.24:  பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்து நடக்கிறது. இதனால் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை-ராமேஸ்வவரம் தேசிய நெடுஞ்சாலை பரமக்குடி நகர் பகுதிக்குள் சுமார் 7 கி.மீ. தூரம் செல்கிறது. தற்போது நான்கு வழி சாலை நடைமுறைக்கு வந்தாலும், பார்த்திபனூர் முதல் சத்திரக்குடி வரையிலும் வசதியாக ஓய்வு எடுத்து செல்வதற்கான கடைகள் இல்லாததால் சுற்றுலா வாகனங்கள், தொலைதூரம் செலல்லக் கூடிய கனரக வாகனங்கள் பரமக்குடி நகர் பகுதிக்குள் வந்து செல்கிறது. இந்த வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலிலும் நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் எற்பட்டு வருகிறது.

காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி செல்லும் குழந்தைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகத்திற்கு செல்பவர்கள் என போக்குவரத்து நெரிசல் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில், பரமக்குடி நகர் பகுதிக்கு வரும் கனரக வாகனங்கள்,பள்ளி கல்லூரி வாகனங்கள், தனியார் வாகனங்கள் சாலையில் இறுபுறங்களிலும் நிறுத்தப்பட்டுவருகிறது. இதனால், பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் போக்குவரத்து நெரிசலால் வாகனங்களை இயக்க முடியாமல் தவிக்கின்றனர். இருபுறங்களிலும் பேருந்து வரும் போது சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். பெண்கள் உயிர் பயத்தி வாகனங்களை இயக்கி வருகின்றனர். போக்குவரத்து போலீசார் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் கனரக வாக னங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

Tags : accident ,highway ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...