×

ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் 33 ஊராட்சி துணைத்தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

ஆர்.எஸ்.மங்கலம், ஜன. 12: ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சிகளில், 33 ஊராட்சியில் துணைத் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு ஊராட்சியில் போட்டியிட்டு ஒருவர் வெற்றிபெற்றுள்ளார். ஒரு இடம் அறிவிக்கப்படாமல் உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் மொத்தம் 35 ஊராட்சிகள் உள்ளன. இதில் 33 ஊராட்சிகளுக்கு துணைத் தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் விவரம்: புல்லமடை ஊராட்சி துணைத் தலைவராக மரிய மைக்கேல், கருங்குடி- கோட்டையம்மாள், ஆனந்தூர்-ஜலாவுதீன், வரவணி-முத்துலெட்சுமி, ராதானூர்-காமாட்சி, செங்குடி-சேவியர், திருப்பாலைக்குடி-முகம்மது சிராஜூதீன், கோவிந்தமங்கலம்-முருகேசன், சனவேலி-வைரவஜோதி, கள்ளிக்குடி-வாசுகி, தும்படைக்காகோட்டை-சரவணன், ஆயங்குடி- பிரியா, செவ்வாய்பேட்டை-ஸ்டெல்லாமேரி, கற்காத்தகுடி-கார்த்திக், காவனூர்-ரவுத்திரி, காவணக்கோட்டை-மகாலிங்கம்,

அழகர்தேவன்கோட்டை-ராஜேந்திரன், ஓடைக்கால்-கீதா, திருத்தேர்வளை-ராமச்சந்திரன், கள்ளிக்குடி-வினோஜா, கூடலூர்-பாரதி, சிறுகுடி- சுந்தரவடிவேல், வடக்கலூர்-மாலதி, கொட்டகுடி-ராஜவள்ளி, அ.மணக்குடி-ஆறுமுகம், பிச்சங்குறிச்சி-அருள்சாமி, கடலூர்-சேவியர், ஊரணங்குடி-செல்வி, பாரனூர்-மணிகண்டன், சாத்தனூர்-ஜோதி, சேத்திடல்-தங்கம், மேல்பனையூர்-கோபால், சோழந்தார்-நாகராஜன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். சித்தூர்வாடி ஊராட்சியில் போட்டி நடைபெற்று இதில் உடையார் என்பவர் வெற்றி பெற்றார். ஏ.ஆர்.மங்கலம் ஊராட்சியில் துணைத்தலைவர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

Tags : panchayat vice presidents ,
× RELATED ஊராட்சி துணை தலைவர்கள் கூட்டமைப்பு...