×

போகலூர் ஒன்றியத்தில் திமுக வெற்றி: சான்றிதழ் அளிக்க தாமதமானதால் சாலை மறியல்

பரமக்குடி, ஐன. 12: போகலூர் ஊராட்சி ஒன்றிய தேர்தலில் திமுக வேட்பாளர் சத்தியா குணசேகரன் வெற்றி பெற்றார். இதற்கு சான்றிதழ் வழங்க தாமதமானதால் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியத்தில் திமுக 5 இடங்களிலும், அதிமுக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் ராமசாமி தலைமையில் 3 பேரும் நேற்று நடைபெற்ற ஒன்றிய தலைவர் தேர்தலில் வாக்களித்தனர். வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும்போது கதிரவன் என்ற கவுன்சிலர் பூமிநாதன் கவுன்சிலரை வாக்களிக்கவிடாமல் மையை தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பாஜ வேட்பாளர் காளிதாஸ் வாக்களிக்க மறுத்து வெளியே சென்றுவிட்டார். இதனால் 4-3 என்ற வாக்கு விஷயத்தில் திமுக வேட்பாளர் சத்தியா குணசேகரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வெளியே சென்ற பாஜ கவுன்சிலர் காளிதாஸ் மீண்டும் வாக்களிக்க வேண்டும் என கேட்டதால் வாக்களிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சத்தியா குணசேகரன் வெற்றிபெற்றதாக அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மறுவாக்கு எண்ணிக்கை என்ற கோணத்தில் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், கோபமடைந்த திமுகவினர் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், திமுக வேட்பாளர் சத்தியா குணசேகரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

Tags : victory ,DMK ,delays ,Bogalur Union: Road ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...