×

ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது: தலைவராக ராதிகாபிரபு தேர்வு

ஆர்.எஸ்.மங்கலம். ஜன. 12: ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல் நடந்தது. இதில் திமுகவைச் சேர்ந்த ராதிகாபிரபு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் 14 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளன. இதில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் 9 பேர் வெற்றி பெற்றனர். அமமுக 3, அதிமுக 2 பேர் வெற்றிபெற்றனர். இந்நிலையில் நேற்று ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு 12வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற ராதிகா பிரபும், 14வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற ரோகினி ராணியும் போட்டியிட்டனர்.

ரகசிய வாக்கெடுப்பில் ராதிகா பிரபு 9 வாக்குகளும், ரோகிணி ராணி 5 வாக்குகளும் பெற்றனர். ரோகிணி ராணியை விட 4 வாக்குகள் அதிகம் பெற்று ராதிகாபிரபு வெற்றி பெற்று ஒன்றியக் குழு தலைவராக தேர்வு பெற்றார். துணைத் தலைவராக 2வது வார்டு, ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த சேகர் என்ற சபரி ராயப்பன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளான கோபாலகிருஷ்ணன் (வேளாண்மை உதவி இயக்குநர்) மற்றும் ராஜா (வட்டார வளர்சி அலுவலர்) ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : DMK ,RS Mankalam Union ,Radhikaprabhu ,
× RELATED தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்