×

வைகை மண்டல மாநாடு


பரமக்குடி, ஐன.8: பரமக்குடி அரிமா சங்கத்தின் சார்பாக 7வது வைகை மண்டல மாநாடு நடைபெற்றது, இதில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.விழாவிற்கு வைகை மண்டலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அரிமா மாவட்ட முதலாம் துணை ஆளுநர் ஜஸ்டின்பால், இரண்டாம் துணை ஆளுநர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கணவரை இழந்த பெண்களுக்கு தையல் மிஷின், இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கு  நிதிஉதவி, தெருவோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி, தொழுநோயாளிகளுக்கு இருப்பிடம் மற்றும்  இலவச உணவு, பசுமை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள், பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு புத்தாடையும், ஏழை மாணவர்களின் கல்விக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் முனைவர் மணிமாறன், ஆனந்த பொன்ராஜ், ஸ்டான்லி, சதீஷ்குமார், பரமக்குடி அரிமா சங்கத்தின் தலைவர் ராமமூர்த்தி செயலாளர்  சரவணன், பொருளாளர் மாதவன் உள்ளிட்ட 4 வட்டங்களை சேர்ந்த அரிமா சங்க தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் அரிமா மெட்ரிகுலேஷன் பள்ளியின் செயலாளர் குரு சண்முகம் நன்றி கூறினார்.

Tags : Vaigai Regional Conference ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை