×

திருவாடானை தாலுகாவில் நம்புதாளை ஊராட்சியில் அதிக வேட்பாளர் போட்டி

தொண்டி, டிச.25:  திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட ஊராட்சிகளில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் ஊராட்சியாக நம்புதாளை ஊராட்சி உள்ளது. தமிழகத்தில் முதல் கட்டமாக வரும் 27ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட 47 ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நம்புதாளை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவருக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர். தாலுகாவிலேயே அதிகம் பேர் போட்டியிடும் ஊராட்சியாக நம்புதாளை உள்ளது. இங்கு மொத்தம் 5ஆயிரத்து 538 வாக்குகள் உள்ளது. அதிகமான வாக்காளர்களை கொண்ட இவ்வூராட்சியில் தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டியிடுவது இதுவே முதல் முறை என தெரிகிறது.

கடந்த காலங்களில் சுழற்சி முறையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இம்முறை அனைத்து வார்டுகளிலும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். 12 வார்டுகளிலும் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இதிலும் போட்டியின்றி யாரும் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. திரும்பும் பக்கம் எல்லாம் வேட்பாளர்களே வலம் வருகின்றனர். கடும் போட்டிக்கு மத்தியில் இம்முறை தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாக வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த காலங்களில் இருந்ததை விட இம்முறை 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நவீன காலத்திற்கு ஏற்ப செல்போன்களில் ஓட்டு கேட்கின்றனர். வார்டு உறுப்பினர் கூட தங்கள் பகுதி வாக்காளர்களின் நம்பரை வாங்கி தங்களுக்கு வாக்கு கேட்டு செய்தி அனுப்புகின்றனர். உள்ளுர் வாட்ஸ்அப் குரூப்பில் எப்போதும் வாக்காளர் படங்களே வருகிறது என்கிறார்கள்.

Tags : Nirvadalai Panchayat ,candidate ,Thiruvananthapuram Taluk ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்