×

பஞ்., தலைவர் பதவிக்கு போட்டி கோரணம்பட்டியில் ராஜ்குமார் தீவிர பிசாரம்

இடைப்பாடி, டிச.24: கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கோரணம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராஜ்குமார் வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார்.
சுயேச்சையாக போட்டியிடும் ராஜ்குமார், ஊராட்சிக்குட்பட்ட ராயணம்பட்டி, ஓட்டன்காடு, உத்தண்டிவளவு, தொப்பக்காடு, கோம்பைக்காடு, சந்தைகரடு, ஆண்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து ஆதரவு திரட்டினார். அவருடன் கோபால், சித்தன், பழனிசாமி, வெங்கடேசன், கண்ணன், மாரியப்பன், ராஜரத்தினம், அய்யந்துரை, கோபுரத்தினம், தர்மலிங்கம், பழனிசாமி, செல்லக்கண்ணு, கார்த்திகேயன், தமிழரசன் உள்ளிட்டோர் வாக்குசேகரித்தனர்.

Tags : Koranampatti ,BJP ,
× RELATED காலை 10.20 மணி நிலவரம்: தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி முன்னிலை