×

4வது மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி

சேலம், ஜூன் 10: சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்ைட குடிமை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (60). இவர் நேற்று முன்தினம் இரவு, அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் உள்ள தனது வீட்டின் முன் சுவரில் அமர்ந்துள்ளார். அப்போது அவர் திடீரென தவறி கீழே விழுந்தார். இதில், தலை உள்பட உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் நேற்று மதியம், முதியவர் கோவிந்தராஜ் உயிரிழந்தார். இதுபற்றி அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Salem ,Govindaraj ,Salem Astampatty ,Johnsonpet Civic Transition Board ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள...