×

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

சேலம், ஜூன் 10: சென்னையில் இருந்து கோவைக்கு, இன்டர்சிட்டி ரயில் நேற்று முன்தினம் இரவு சென்றது. சேலம் ரயில் நிலையம் யார்டு பகுதியில் சென்ற போது, 25வயது மதிக்கத்தக்க வாலிபர், ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த சேலம் ரயில்வே போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. ரயில் வருவதை தெரியாமல் தண்டவாள பாதையை கடந்து சென்றாரா அல்லது தற்கொலை செய்ய ரயில் முன் பாய்ந்தாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

The post ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Salem ,Chennai ,Coimbatore ,Salem railway ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள...