×

கத்திமுனையில் பணம் பறித்த 2 பேரை விரட்டி பிடித்தனர்

சேலம், ஜூன் 11: சேலம் கூட்டாத்துப்பட்டி சாந்தி நகரை சேர்ந்தவர் ஸ்டாலின் (23). இவர் நேற்றுமுன்தினம் அம்மாப்பேட்டை குமரகிரி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை கத்தி முனையில் வழிமறித்த 2 பேர், பணம் கேட்டு மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போடவே, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்தனர். பொதுமக்களை பார்த்ததும் 2 பேரும் தப்பிஓட முயன்றனர். அவர்களை விரட்டிச்சென்று பிடித்து, அம்மாப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், அம்மாப்பேட்டை தெற்கு நாயக்கர் காட்டை சேர்ந்த தருண்ராஜ் (22), காமராஜர் காலனியை சேர்ந்த சவுமிநாராயணன் (20) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கத்திமுனையில் பணம் பறித்த 2 பேரை விரட்டி பிடித்தனர் appeared first on Dinakaran.

Tags : Salem ,Stalin ,Shanti Nagar ,Kootathupatti, Salem ,Ammapettai Kumaragiri Road ,
× RELATED சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள...