×

நடுவலூர், கூடமலை ஊராட்சியில் வேட்பு மனு பரிசீலனையில் கடும் வாக்குவாதம்

கெங்கவல்லி, டிச.18: கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம் 14 ஊராட்சிகளை உள்ளடக்கியது. இந்த ஊராட்சிகளில் 138 வார்டு உறுப்பினர் பதவிக்கு 389 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் மீதான பரிசீலனை நேற்று அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நடுவலூர் ஊராட்சியில் தேர்தல் அலுவலர் பிரபு தலைமையில் பரிசீலனை செய்யப்பட்டது. ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளில் 49 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் நேற்று காலை வேட்புமனு பரிசீலனை தொடங்கியது. இதில் 1, 2, 3, 5, 7 உள்ளிட்ட வார்டுகளில் வேட்பு மனுவில் A3 விண்ணப்பத்தில் வேட்பாளர்கள் முறையாக கையெழுத்திடவில்லை எனவும் 12 வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி பிரபு தள்ளுபடி செய்தார். இதுதொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கெங்கவல்லி எஸ்.ஐ. பெளத்திர வெங்கடேஷ், எஸ்எஸ்ஐ குணசேகர் ஆகியோர் சமரசப்படுத்தினர். அப்போது, தேர்தல் அலுவலர் தன்னிச்சையாக செயல்படுவதாக மனு தாக்கல் செய்தவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, மாலை 5 மணியளவில் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் குறித்த விபரங்கள் ஒட்டப்பட்டது.அதேபோல், கூடமலை ஊராட்சியில் 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு கதிரவன் மற்றும் ஞானவேல் ஆகியோர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஞானவேல் மனுவில் சொத்து மதிப்பு குறைவாக கணக்கிடப்பட்டுள்ளதாக கதிரவன் ஆதாரத்துடன் விளக்கினார். இதன்பேரில், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags : Candidate ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்