×

கீழக்கரை கல்லூரியில் கணித பயிற்சி

கீழக்கரை, டிச.16: கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி கணித் துறையும், தெலுங்கானா எம்.டி.டி.எஸ் அறக்கட்டளையும் இணைந்து தேசிய அளவிலான கணித பயிற்சி மற்றும் திறமை தேடல் நிகழ்ச்சியை நடத்தியது. கல்லூரி முதல்வர் சுமையா தலைமை வகித்தார். துணை முதல்வர்கள் ரஜினி, சுலைஹா ஷகீல், முதன்மையர்கள் ஜாஸ்மின், பன்பரசி பாத்திமா, சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் சேக்தாவூத்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறைத்தலைவர் புனிதா வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி பல்கலைக்கழக பேராசிரியர் சோமசுந்தரம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியர் சீனிவாசன், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். உதவி பேராசிரியர் ரெஜினா நன்றி கூறினார்.

Tags : Kilakarai College ,
× RELATED கீழக்கரை கல்லூரியில் பிளஸ்2 மாணவிகளுக்கு கருத்தரங்கு