×

செங்குடி கிராமத்தில் சுகாதாரம்,டெங்கு விழிப்புணர்வு

ஆர்.எஸ்.மங்கலம், டிச. 16: செங்குடி கிராமத்தில் சுகாதாரம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் நடுதல் என முப்பெரும் விழா நடைபெற்றது.ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை மாசில்லா மேரி தலைமை வகித்தார். ஆசிரியர் கருணாகரன் வரவேற்றார். டெங்கு விழிப்புணர்வு பேரணியை ரோட்டரி கிளப் தலைவர் ராஜா துவக்கி வைத்தார். இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், முக்கிய வீதிகள் வழியாக டெங்கு விழிப்புணர்வு அடங்கிய பதாதைகளை ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களையும் எழுப்பியவாறு சென்றனர்.இந்த பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.்இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள் கந்தசாமி, பத்மநாபன், தங்கம், பாலா உள்பட மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் இறுதியாக ஜார் அனைவருக்கும் நன்றி கூறினார்.


Tags : Chengdu ,village ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...