பரமக்குடி, டிச.16: பரமக்குடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ சதன்பிரபாகர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வாறுகால் மற்றும் சாலை வசதிகள் செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.பரமக்குடி தொகுதிக்குட்பட்ட நகர், ஊராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் சென்று, பொதுமக்களிடம் எம்எல்ஏ சதன் பிரபாகர் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று, காட்டுபரமக்குடி பூவைசிய இந்திரகுல பகுதியிலுள்ள தெருக்களுக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.
மேலும் இந்த பகுதியில் கொண்டுவரப்படவுள்ள திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை செய்வதற்கான களப் பணியில் ஈடுபட்டார். பின்னர், அனைத்து தெருக்களிலும் வாறுகால் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு, சமுதாய கூடத்தை உட்கட்டமைப்பு செய்து வசதிகளை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.பொதுமக்களின் சந்திப்பின்போது, பரமக்குடி நகர் செயலாளர் கணேசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பாலமுருகன், கிராமத் தலைவர் கருப்பையா, இளைஞர் சமூக நலச் சங்கத்தின் தலைவர் தில்லை நடராஜன், காட்டுப் பரமக்குடி இளைஞர் மற்றும் மகளிர் மன்றத்தினர் கலந்து கொண்டனர்.










