×

வேதனையில் 10 கிராமமக்கள் கார்த்திகை விளக்கு விற்பனை ஜோர்

தொண்டி, டிச.10: கார்த்திகை திருநாளை முன்னிட்டு அகல்விளக்கு விற்பனை ஜோராக நடைபெற்றது.கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிலர் கார்த்திகை மாதம் பிறந்தவுடன் முதல் நாளே வீட்டில் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இம்மாதத்தில் திருகார்த்திகைக்கு முதல் நாள் வரும் பரணி தீபம் அன்றும் பெரும்பாலானவர்கள் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். மேலும் நாடு முழுவதும் திருகார்த்திகை அன்று அனைத்து வீடுகளிலும் கடைகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றுவார்கள். இந்நிலையில் இன்று கார்த்திகை திருநாள் கொண்டாடப்பட உள்ளதால், தொண்டி, பரமக்குடி, ராமநாதபுரம், சாயல்குடி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கார்த்திகை அகல் விளக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை பெண்கள் ஆர்வமுடன் நேற்று வாங்கி சென்றனர். சிறிய அகல் விளக்கு பத்து ரூ.7, 5, 2 வீதம் எனவும், ஐந்து முகங்கள் கொண்ட உயரம் மற்றும் செய்யப்பட்ட விதத்திற்கு தகுந்தாற்போல் விலைகள் வைத்து வியாபாரிகள் அகல் விளக்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை