×

ழை,புயல் காலங்களில் தங்குவதற்கு கட்டிடம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம், டிச.3: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர் பண்ணை மீனவர்கள் நிறைந்த கிராமமாகும். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் இவர்களுடைய வாழ்வாதாரமே மீன்பிடி தொழில் மட்டுமே. இங்குள்ள மக்கள் பெரும் மழை, புயல் போன்ற காலங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் விதமாக புயல் காப்பகமோ அல்லது பல்நோக்கு சேவை மையக் கட்டிடமோ இல்லை. ‘கடந்த ஆண்டு ஏற்பட்ட புயலுக்கு கூட இங்கிருந்த பொதுமக்களை பாதுகாப்பு நலன் கருதி 3 கி.மீ தூரம் உள்ள உப்பூர் பள்ளிக்கூடங்களில் தங்க வைத்தார்கள். கடலோரக் கிராமங்களான திருப்பாலைக்குடி, முள்ளிமுனை, நம்புதாளை உள்ளிட்ட பல கிராமங்களில் கட்டப்பட்டுள்ளது போல், இந்த பகுதியிலும் பல்நோக்கு சேவை மையக் கட்டிடம் கட்ட வேண்டும். மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிராமத்தை சேர்ந்த கார்த்தி கூறுகையில், எங்கள் ஊர் கடற்கரை ஒரமான பகுதி. இங்கு ஏதேனும் பெரிய புயலோ மழையோ வந்தால் கூட ஆபத்துக்கு தங்கும் அளவிற்கு எந்த கட்டிடமும் இல்லை. தற்போது கன மழை பெய்து வருகிறது. திடீர் திடீரென புயல் சின்னங்களும் அறிவிக்கப்படுகிறது. இதனால் மிகுந்த அச்சத்துடனே வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எத்தனையோ திட்டங்களுக்கு செலவிடும் அரசு எங்கள் மீனவர்கள் நலன் கருதி ஏதாவது ஒரு பொது இடத்தை தேர்வு செய்து பல்நோக்கு சேவை மைய கட்டிடத்தை கட்டித் தர வேண்டும். ஏதாவது அசம்பாவிதம் நடைபெரும் முன் எங்கள் கிராமத்தில் சேவை மையம் கட்ட வேண்டும் என்றார்.

Tags : public ,building ,storms ,event ,
× RELATED கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்...