×

தொண்டி அருகே நம்புதாளையில் வாகனம் மோதி முதியவர் பலி

தொண்டி, நவ. 27: தொண்டி அருகே நம்புதாளையில் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். அவர் யார், எந்த ஊர் என தொண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டுக்கோட்டை-ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலையில் நம்புதாளை அருகே 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்தவர் யார் என தெரியவில்லை. அவர் அரக்கு நிறத்தில் கைலியும், துண்டும் போட்டுள்ளார். அடையாளம் தெரியாத வாகனம் மோதிய இறந்தவர் யார் என்றும், மோதிய வாகனம் எது என்றும் தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : collision ,Thotti ,
× RELATED பஞ்சாபில் சரக்கு ரயில்கள் மோதி விபத்து