×

தொண்டி அருகே முகிழ்த்தகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு சமைக்க கூட தண்ணீர் இல்லாத அவலம்

ொண்டி, நவ. 27: தொண்டி அருகே உள்ள முகிழ்த்தகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 20 நாள்களாக தண்ணீர் வராததால் சத்துணவு சமைப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் கல்வித்துறை அதிகாரிகளாவது நடவடிக்கை எடுப்பார்களா என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே உள்ள முகிழ்த்தகம் நடுநிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 20 நாட்களாக இப்பள்ளிக்கு தண்ணீர் வரவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பலன் இல்லை. சத்துணவு சமைக்ககூட தண்ணீர் இல்லாமல் வீட்டிலிருந்து கொண்டு வந்து சத்துணவு சமைத்து வருகின்றனர். தற்போது அதற்கும் வழியில்லாமல் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. சமையல் செய்யும் பணியாளர் வீடு, வீடாக சென்று தண்ணீர் கேட்டு வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகம் பள்ளி மீது அக்கரை கொள்ளாததால் மாவட்ட கல்வி அதிகாரிகள் உடனடியாக பள்ளிகூடத்திற்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியில் படித்து வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இது குறித்து பெற்றோர்கள் கூறியதாவது, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கு குடி தண்ணீர் வரவில்லை. மாணவர்கள் இயற்கை உபாதைகளுக்கு அருகில் உள்ள குளத்தை பயன்படுத்துகிறார்கள். குடிப்பதற்கு வீட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து விடுகிறார்கள். ஆனால் சத்துணவு சமைக்க முடியாமல் சமையலர் அவதிப்பட்டு வருகிறார். ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்கு நிரந்தரமான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Tags : panchayat union middle school ,Tondi ,
× RELATED உலக புவி தினத்தையொட்டி கொப்பம்பட்டி...