×

சேதமடைந்திருந்த மீனங்குடி தார்ச்சாலை சீரமைப்பு தினகரன் செய்தி எதிரொலி

சாயல்குடி, நவ.26: கடலாடி-மீனங்குடி சாலையில் அமை க்கப்பட்ட பாலங்களில் சாலை சேதமடைந்தது குறித்து தினகரனில் செய்தி வெளியானது. இதனையடுத்து சாலை சீரமைக்கப்பட்டது. கடலாடியிலிருந்து மீனங்குடி வழியாக மேலச்செல்வனூர் செல்ல பிரதான சாலை உள்ளது. இச்சாலையை கருங்குளம், பூதங்குடி, நரசிங்கக்கூட்டம், பாப்பாகுளம், மீனங்குடி, பள்ளனேந்தல், சாத்தங்குடி வெள்ளாங்குளம், பாடுவனேந்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடலாடியிலிருந்து மீனங்குடி வரையிலான சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக இருந்தது.இப்பகுதி கிராம மக்களின் கோரிக்கையை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி முகமையின் சார்பில் கடந்த மே மாதம் பாரதபிரதமர் கிராமச்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம்  மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கப்பட்டது. புதிய சாலை போடப்பட்டு ஆறு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் நரசிங்கக்கூட்டம் விலக்கு ரோடு அருகே உள்ள 5 மடை பாலத்தில் சாலை சேதமடைந்தது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.இது குறித்து தினகரனில் நவ.23ம் தேதி செய்தி வெளியானது. இதனையடுத்து கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், உதவி பொறியாளர், பணி மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் பாலங்களில் சேதமடைந்த இடங்களில் சீரமைப்பு பணிகள் நடந்தது.

Tags : Meenangudi ,
× RELATED அய்யனார் கோயிலில் புரவி எடுத்து பக்தர்கள் வழிபாடு