×

கீழக்கரை அருகே பள்ளமான சாலையால் பரிதவிக்கும் மக்கள்

கீழக்கரை,நவ.22:  பெரியபட்டிணத்திலிருந்து களிமண்குண்டு வழியாக குத்துகல் வலசை செல்லும் சாலை பல்லாங்குழி போல் உள்ளது. இதனால் பள்ளி ,கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
கீழக்கரை அருகே பெரியபட்டிணத்தில் இருந்து களிமண்குண்டு வழியாக குத்துகல் வலசை செல்லும் தார்சாலை முழுவதும் சேதமடைந்து பல்லாங்குழிபோல் உள்ளது. இந்தசாலை வழியாக திருப்புல்லாணி, கீழக்கரை. காஞ்சிரங்குடி உள்ளிட்ட பல ஊர்களுக்கு பேரூந்து செல்கிறது. மேலும் கீழக்கரையில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களும் இந்த வழியாக செல்கிறது.
இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே கலெக்டர் இப்பகுதி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த சாலையை சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள அளிந்திக்கோட்டை கிராமம் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கே சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆனால் இந்த ஊருக்கு செல்லக் கூடிய சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த கிராமத்தில் மாசானி அம்மன் என்ற கோவிலும் உள்ளது. இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகையால் இக்கோவிலுக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்களும், உள்ளூர் பொதுமக்களும் டூவீலர் போன்ற வாகனங்களில் செல்லும் வாகன ஒட்டிகளும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த சாலையை பொதுமக்களின் நலன் கருதி விரைவில் சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : dirt road ,bottom ,
× RELATED மதுரை கீழக்கரையில் நடைபெற உள்ள...