×

காரங்காடு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

திருவாடானை, நவ. 22:  காரங்காடு அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
திருவாடானை அருகே காரங்காடு கிராமத்தில் அமல அன்னை  மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பல்வேறு மாணவ குழுக்கள் அமைத்து 50 மரக்கன்று நடப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பெர்னடிக் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். ஆசிரியை பொன்சீலி வரவேற்றார். பள்ளி பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் வினோத் தலைமையாசிரியை சகாயராணி ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : Planting Ceremony ,Karangadu School ,
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...