×

கீழக்கரை கல்லூரியில் பிளஸ்2 மாணவிகளுக்கு கருத்தரங்கு

கீழக்கரை, நவ.5: கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் பிளஸ்2 மாணவிகளுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்ற கருத்தரங்கு நடபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுமையா தலைமை வகித்தார். சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் காலித் ஏ.கே புஹாரி, பொது துணை செயலாளர் சேக்தாவூது, உதவி பேராசிரியர் கண்ணதாசன். மாணவ நலக்குழு உறுப்பினர் நிஜாமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியை ராதா வரவேற்றார். இதில் பேராசிரியர் கண்ணதாசன் பேசுகையில், மாணவிகள் தன்னம்பிக்கையுடன் படித்தால் எந்த துறையிலும் முன்னேரலாம். அதேபோல் மாணவிகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என்று பேசினார்.

பேராசிரியை பாத்திமா ருஸ்தா பேசுகையில், மாணவிகள் பிளஸ் 2விற்கு பிறகு எந்த படிப்பை தேர்வு செய்து படிப்பது என்றும், அந்த படிப்பிற்கு அரசு உதவி தொகைக்கு விண்ணப்பித்து எப்படி பெறுவது என்றும் விரிவாக பேசினார். மாணவ பேரவை தலைவி மரியம் ஆபிரா நன்றி கூறினார். இதில் பல்வேறு பள்ளிகளிலிருந்தும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்றால் அனைத்து நோய்களுக்கான மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால் மிக முக்கிய துறையான நரம்பியல் துறைக்கே மருத்துவர் இல்லை. எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் மதுரையில் இருந்தே மருத்துவர் வரவேண்டும்.

Tags : Seminar ,Kilakarai College ,
× RELATED சாயர்புரம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்