×

கீழக்கரையில் இன்று மின்தடை

கீழக்கரை,நவ.5: கீழக்கரை உபமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் கீழக்கரை நகர் முழுவதும், அலவாக்கரைவாடி, மாயாகுளம், முகமது சதக் கல்லூரி பகுதிகள், உத்திரகோசமங்கை, தேரிருவேலி, பாலையரேந்தல், காஞ்சிரங்குடி மற்றும் மோர்குளம் அதன் சுற்றுவட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை