×

சென்டர் மீடியனில் பைக் மோதி வாலிபர் பலி

திருப்புவனம், அக்.25: திருப்புவனம் அருகே லாடனேந்தலைச் சேர்ந்தவர் மருதுபாண்டி மகன் வினோத்(31). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் மதுரையிலிருந்து லாடனேந்தலுக்கு டூவீலரில் சென்றார். நான்கு வழிச்சாலையில் சென்றபோது பசியாபுரம் கீழடி பிரிவில் பைக் திடீரென நிலைகுலைந்து சென்டர் மீடியனில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வினோத் பலியானார். திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை