×

முகிழ்த்தகம் ஊராட்சியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

தொண்டி, அக். 24: தொண்டி அருகே உள்ள முகிழ்த்தகம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று சுகாதார துறை மற்றும் ஊராட்சி இணைந்து டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி, நிலவேம்பு கசாயம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தினர்.கடந்த சில தினங்களாக தொண்டி மற்றுமு சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் முகிழ்த்தகம், சோளியக்குடி, லாஞ்சியடி உள்ளிட்ட கிராம பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் டெங்கு காய்ச்சல் மற்றும் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இதை தடுக்கும் நோக்கில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முகிழ்த்தகம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளியில் துவங்கிய பேரணி கிராத்தின் ஒவ்வொரு வீடாக சென்றனர். டெங்கு பரவும் விதம் குறித்தும் தடுக்கும் முறைகள் குறித்தும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர். இதையடுத்து கிராம மக்கள் அனைவருக்கும் நில வேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. சுகாதார நடவடிக்கையாக கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றது. அரசு மருத்துவர் சினேகா ரெத்தினம், சுகாதார ஆய்வாளர் அருள், ஊராட்சி செயலாளர் சந்திர மோகன் உட்பட செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை