×

திருவெற்றியூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சலை தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணி

திருவாடானை, அக். 22: திருவெற்றியூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக அரசு சுகாதாரத்துறை மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுகாதாரத்துறை பணியாளர்கள் கிராமங்களுக்கு சென்று வீடு, வீடாக பார்வையிட்டு தண்ணீர் தேங்கி உள்ளதா, கொசுக்கள் உற்பத்தி போன்றவற்றை கண்காணித்து வருகின்றனர். சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் தேங்கி இருந்தால் அவற்றை அகற்ற நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திருவெற்றியூர் ஊராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்த அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் கொசு மருந்து புகை கருவி மூலம் தெளிக்கப்பட்டது.

Tags : Dengue Fever ,Thiruvettiyoor ,
× RELATED டெங்கு விழிப்புணர்வு பேரணி