×

கீழக்கரை கல்லூரியில் மும்பெரும் விழா

கீழக்கரை, அக்.17:  கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளில் கல்லூரியின் மறைந்த நிறுவனர் பி.எஸ்.அப்துல் ரஹ்மானுக்கு பாராட்டு விழா, அப்துல்கலாம் புத்துணர்வு விழா, இலக்கிய சாரல் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கு சீதக்காதி அறக்கட்டளையின் டிரஸ்டி அகமது புஹாரி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சுமையா, சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் சேக்தாவூதுகான், துணை முதல்வர் ரஜினி, முன்னாள் கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை தலைவர் அகிலா வரவேற்றார். முன்னதாக மாணவி செய்யது நஸீஹா கிராஅத் ஓதி விழாவை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக உதவி பேராசிரியர் கண்ணதாசன் கலந்து கொண்டு பேசுகையில், கல்லூரியில் பயிலும் மாணவிகள் எவ்வாறு ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக இக்கல்லூரி மாணவிகள் உள்ளீர்கள். இங்கு எப்படி உள்ளீர்களோ அவ்வாறு வீட்டிலும் பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் என்று பேசினார். விழாவில் அழகப்பா பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,

Tags : Mumbai College Festival ,
× RELATED நெற்பயிரில் குலநோய் தாக்குதல் தீவிரம்