×

ஆம்பூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

ஆம்பூர், அக். 4: ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவரது 15 வயது மகள் இதேபகுதியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 7ம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. விசாரணையில் சிறுமியை உம்ராபாத் அடுத்த பாலூரை சேர்ந்த கலைநேசன் மகன் பூவரசன்(26) என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அங்கு சென்று, தட்டிகேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பூவரசன் அவர்களை ஆபாசமாக பேசினாராம்.இதுகுறித்து சிறுமியின் தாயார் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பூவரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : kidnapping girl ,Ambur ,
× RELATED ஏரியில் மூழ்கி வாலிபர் பலி