×

அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் டெக்னீசியன் பணியிடம்

சேலம், செப்.24:. தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும், அரசு மருத்துவமனைகள் செயல்படுகிறது. இதில் அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்ற அவசர சிகிச்சை டெக்னீசியன் என்கிற பணியிடங்கள் நீண்ட காலமாக உருவாக்கப்படவில்லை. இதனால் இந்த படிப்பை படித்து முடித்த மாணவர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அரசு மருத்துவ கல்லூரிகளில் படித்து, சிறப்பு பயிற்சி பெற்ற அவசர சிகிச்சை டெக்னீசியன்களுக்கு, புதியதாக பணியிடங்கள் உருவாக்கி பணியில் அமர்த்த வேண்டும் என்ற ேகாரிக்கை தற்ேபாது வலுத்துள்ளது. இது குறித்து சேலம் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ள அவசர சிகிச்சை டெக்னீசியன்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி கூறியது: தமிழக அரசு சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில், மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், கடந்த 2005ம் ஆண்டு முதல் அவசர சிகிச்சை டெக்னீசியன் படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த படிப்பு ஆரம்பிக்கப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. ஆனால் இதுவரை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை டெக்னீசியன் பணிக்கான அரசாணையும் வெளியிடவில்லை, பயிற்சி ெபற்ற யாரும் பணியிலும் அமர்த்தப்படவில்லை. ஒவ்வொரு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்தும் ஆண்டுக்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து விட்டு வெளியே வருகின்றனர். அவரச சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவிகளில் பணியாற்றவும் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கையாளுவதிலும் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர். ஆனால் தற்போது வரை எந்தவொரு வேலை வாய்ப்பும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் துப்புரவு தொழிலாளர்களும், சிகிச்சை அறியாதவர்களும்  நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த அவலத்தை போக்க, பயிற்சி பெற்ற அவசர சிகிச்சை டெக்னீசியன்களை, பணியில் அமர்த்த வேண்டும். இந்த பணிநியமனம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு சத்தியமூர்த்தி கூறினார்.

Tags : emergency department ,
× RELATED என்எல்சி சார்பில் கட்டப்பட்டது அரசு...