×

பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்பும் பணி தீவிரம்

சேலம், மே 17: தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனிடையே தமிழக பாடநூல் கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் வரும் கல்வி ஆண்டிற்கு தேவையான பாட புத்தகங்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்திற்கு 6 முதல் பிளஸ்2 வரையிலான பாடப்புத்தகங்கள் வந்துள்ளது. இதனிடையே சேலம் சீதாராம்செட்டி தெருவில் உள்ள அலுவலகத்தில் இருந்து பாடவாரியாக தரம் பிரிக்கப்பட்டு சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளுக்கு தேவையான பாடபுத்தகங்களை அனுப்பும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்பும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu School Education Department ,Tamil Nadu ,
× RELATED சேலம் ஏரியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கின