×

பைக் மீது கார் மோதி மெக்கானிக் பலி

ஆத்தூர், மே 15: ஆத்தூர் அருகே, காட்டுக்கோட்டை எல்.ஆர்.சி., நகர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் பழனிசாமி(44). பைக் மெக்கானிக்கான இவர், நேற்று மதியம் 3 மணியளவில், ஆத்தூருக்கு செல்வதற்காக பைக்கில் அம்மம்பாளையம் பஸ் ஸ்டாப் வழியாக சென்றார். அப்போது, சென்னையில் இருந்து, சேலம் நோக்கி சென்ற கார், முன்னால் சென்ற பழனிசாமி பைக் மீது மோதியது. இந்த விபத்தில், பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட பழனிசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து, காரை நிறுத்தி விட்டு தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர்.

The post பைக் மீது கார் மோதி மெக்கானிக் பலி appeared first on Dinakaran.

Tags : Athur ,Kandaswamy ,Palaniswami ,Kattukottai LRC ,Nagar ,Ammampalayam ,Attur ,Chennai ,
× RELATED மெடிக்கலில் ஊசி போட்ட மாணவன் பரிதாப பலி: கடைக்காரர் கைது