×

திமுக சார்பில் நீர்மோர் வழங்கல்

இளம்பிள்ளை, மே 15: இடங்கணசாலை நகர திமுக சார்பில் பஸ் நிலையம் முன்பு நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு, நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நீர்மோர், கம்மங்கூழ், மதிய உணவு, ஐஸ், லெமன் ஜூஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், நகராட்சி துணைத்தலைவர் தளபதி, நகர பொருளாளர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் ரமணி, ராஜேந்திரன், நகர துணைச் செயலாளர்கள் குமார், கோமதி மணிகண்டன், நகரமன்ற உறுப்பினர்கள் இந்திராணி வஜ்ரவேல், வேலாயுதம், சித்ரா சதாசிவம், ரமேஷ் மற்றும் நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திமுக சார்பில் நீர்மோர் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : DMK ,Yumapillai ,Neemor ,Itanganasalai City DMK ,Municipal Chairman ,Kamalakannan ,Dinakaran ,
× RELATED திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் 1000 பேருக்கு நல உதவிகள்