×

வீட்டு உரிமையாளர் மீது வழக்கு

சேலம், மே 19: சேலம் புதுரோடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (35). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருவாகவுண்டனூரை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரது வீட்டை போகியத்திற்கு எடுத்து வசித்து வந்தார். பின்னர் அவரது வீட்டிற்கே சென்று விட்டார். சில மாதங்களாக வீடு பூட்டியிருந்தது. இதையடுத்து உரிமையாளர், வேறு ஒருவரை வீட்டில் வாடகைக்கு குடியமர்த்தினார். அப்போது வீட்டில் வைத்திருந்த ₹85,500 மற்றும் நகை, வெள்ளி பொருட்கள் இருந்ததாகவும், அதனை காணவில்லை என கூறிய ஜீவா சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து முகமது இஸ்மாயில் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டு உரிமையாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Salem ,Jeeva ,Salem Pudurodu ,Mohammad Ismail ,Thiruvagoundanur ,Dinakaran ,
× RELATED விஷம் குடித்த கணவர் சாவு மருத்துவமனையில் மனைவி தற்கொலை