×

கல்லூரி சென்ற மாணவி மாயம்

சேலம், மே 16: சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 21 வயது மாணவி நேற்றுமுன்தினம் காலை வழக்கம்போல் மகளிர் கல்லூரிக்கு சென்றார். இவர் அக்கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாமாண்டு படித்து வருகிறார். அவரை அவரது தந்தை கல்லூரியில் விட்டார். மீண்டும் அந்த மாணவியை வீட்டுக்கு அழைத்து வர அவரது தந்தை கல்லூரியில் காத்திருந்தார். அப்போது கல்லூரியில் இருந்து மாணவி வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து மாணவி குறித்து அவர் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரித்தார். அப்போது தனது மகள் காணாமல் போனது குறித்து அறிந்தார். இது குறித்து மாணவியின் தாய் பேர்லாண்ட்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர். மாணவி கல்லூரியில் படிக்க பிடிக்காமல் மாயமானரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கல்லூரி சென்ற மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Salem ,Salem Dadagapatti ,Dinakaran ,
× RELATED தளி அருகே மூதாட்டி மாயம்