×

ெபண்களின் கல்வி திறன் உயர தொண்டியில் அரசு மகளிர் கல்லூரி பொதுமக்கள் வேண்டுகோள்

தொண்டி, செப்.19:  தொண்டி பகுதி பெண்களின் கல்வி திறன் உயர தொண்டியில் மகளிர் கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் தொண்டியை சார்ந்தே உள்ளது. இப்பகுதியின் முக்கிய தொழிலாக விவசாயம் மற்றும் மீன்பிடி தொழீல் உள்ளது. பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரே அதிகமாக உள்ளனர். இங்கு பிளஸ் 2 வரையிலும் இருப்பதால் பெரும்பாலும் பெண்கள் பள்ளி படிப்பை முடித்து விடுகின்றனர்.
அடுத்த கட்டமாக கல்லூரி படிப்பிற்கு ராமநாதபுரம், காரைக்குடி என செல்ல வசதியில்லாமல் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். இது பெண்கள் முன்னேற்றத்திற்கு இடையூறாக உள்ளது. அதனால் தொண்டியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துன்னனர்.
இதுகுறித்து தொண்டி மக்கள் நல வளர்ச்சி சங்கத்தினர் கூறியது, ‘‘தொண்டியை சுற்றிலும் ஏராளமான கிராம பகுதிகள் உள்ளது. இங்குள்ள ஏழை எளிய மக்கள் தங்கள் குழந்தைகள் கல்லூரி படிப்பை தொட்ர முடியாமல் கஷ்டப்படுகின்றனர். போதிய வசதி இல்லாமல் வெளியூரில் சென்று படிக்க முடியவில்லை என்று கூறுகின்றனர். அதனால் தொண்டியில் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளிடமும் மனு கொடுத்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை