×

சேலம் மாவட்டத்தில் 331 மி.மீட்டர் மழை பதிவு

சேலம், செப். 15:சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் 331 மி.மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், வீரகனூர், கெங்கவல்லி, ஆணை மடுவு, கரியகோயில், தம்மம்பட்டி, வாழப்பாடி, சங்ககிரி, இடைப்பாடி, சேலம், ஏற்காடு, ஓமலூர், காடையாம்பட்டி, மேட்டூர் பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை கொட்டியது. இதேபோல், மாநகரரில் ஒரு சில பகுதிகளில் இரவு மழை பெய்தது.   மழையால், தாழ்வான பகுதிகளில் இருந்த ஒரு சில வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மிக அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 69மில்லி மீட்டர் மழை பதிவானது.

 மாவட்டம் முழுவதும் நேற்று  முன்தினம் பெய்த மழையின் அளவு(மில்லி மீட்டரில்) வருமாறு: பெத்தநாயக்கன்பாளையம்-69, ஆத்தூர்-57.6, வீரகனூர்- 55, கெங்கவல்லி-40, ஆணைமடுவு-37, கரியகோயில்-32, தம்மம்பட்டி-9.6, வாழப்பாடி-8, சங்ககிரி-4, இடைப்பாடி-4.6, சேலம்- 4.1,காடையாம்பட்டி-3.1,  ஏற்காடு- 3, ஓமலூர்-3,மேட்டூர்-1.4  என மொத்தம் 331.4 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags : Salem district ,
× RELATED சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...