×

மணல் திருடினால் நடவடிக்கை: டிஎஸ்பி

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 25:  ஆர்.எஸ் மங்கலம் மற்றும் திருவாடானை பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பகுதிகளில் கூடுதலான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காரணம் இப்பகுதியில் எஸ்.பி.பட்டிணம் பாம்பாறு, கூகுடி ஆறு, கோவிந்தமங்கலம் போன்ற பகுதிகளில் இயங்கி வந்த மணல் குவாரிகளை மூடப்பட்டதால் இப்பகுதியில் கட்டிடப்பணிகளுக்கு தேவையான மணல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை பயன்படுத்தி சில நபர்கள் திருட்டுதனமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் கூறுகையில், ‘திருவாடானை பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது மட்டுமின்றி அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் மணல் திருட்டு முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை