×

கமுதி பேரூராட்சிக்குட்பட்ட தெருக்களில் கொசுப்புழு ஒழிப்பில் மஸ்தூர் பணியாளர்கள் தீவிரம்

கமுதி, ஜூன் 18: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் கொசுப் புழு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்தது.பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மஸ்தூர் பணியாளர்கள் கமுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தொட்டி, டிரம்கள், குடங்களில் கொசுக்களை உற்பத்தி செய்யும் புழுக்கள் காணப்பட்டால் அதை அழிப்பதற்கு பினாயில் ஊற்றினர். கடும் வெயிலை கூட பார்க்காமல் பணிகளை தீவிரமாக நடத்தினர். கொசுப்புழு உற்பத்தியானால் டெங்கு போன்ற காய்ச்சல் பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே தண்ணீர் தேக்கி வைக்கும் பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்று எடுத்து கூறினர்.



Tags : Mastore ,power plant ,Kozhuppu ,streets ,Kamathi Pura ,
× RELATED புளிய மரத்தில் கார் மோதல்; மேட்டூர் அனல் மின்நிலைய பெண் அதிகாரி, மகன் பலி