×

பிரான்மலை கலியுக மெய் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

சிங்கம்புணரி, ஜூன் 18:பிரான்மலை கலியுக மெய் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது.சிங்கம்புணரி அருகே பிரான்மலை கலியுக மெய் அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு புரவி எடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஒன்பதாம் தேதி காப்பு கட்டி திருவிழா தொடங்கியது. இதில் தினமும் அய்யனாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஒன்பதாம் திருவிழாவாக நேற்று முன்தினம் இரவு பாப்பாபட்டியிலிருந்து அய்யனார் கோயிலுக்கு வண்ண மலர்கள் பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட 2 அரண்மனை புரவிகள் மற்றும் 3 நேர்த்திக்கடன் புரவிகளை பக்தர்கள் சுமந்து வந்தனர்.தொடர்ந்து கலியுக மெய் அய்யனாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று பத்தாம் திருவிழாவில் மதுக்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.டெங்கு காய்ச்சல் பீதியில் பொதுமக்கள்

Tags : Kaliyuga Maiyiyan Aiyanar Temple Festival ,
× RELATED பிரான்மலை கலியுக மெய் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா