×

ராமலிங்க பிரதிஷ்டையில் எழுந்தருளிய அனுமன்

ராமேஸ்வரம், ஜூன் 13:  ராமேஸ்வரம் கோயிலில் நேற்று ராமலிங்க பிரதிஷ்டை விழா நடைபெற்றது. ஸ்ரீராமர் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் ராவண சம்ஹாரம், விபீஷணர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த நிலையில்.

நேற்று ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு ராமநாத சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு 5 மணிf;கு ஸ்படிகலிங்க பூஜையும், 6 மணிக்கு கால பூஜைகளும் நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஸ்ரீராமர், சீதா, லெட்சுமணன், அனுமன் உள்ளிட்ட மூர்த்திகள் தங்க கேடயத்தில் எழுந்தருளி நான்குரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு மேல் சுவாமி சன்னதியில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெற்றது. சுவாமி சன்னதி அமைந்துள்ள முதல் பிரகாரத்தில் சந்தோஷ் குருக்கள் இரண்டு அனுமன் சிலைகளை கைகளில் ஏந்தி அருள்வந்து சாமியாடியபடியே பிரகாரத்தை சுற்றி வந்து ராமநாதசுவாமி சன்னதியில் லிங்கத்தை சிவாச்சாரியாரிடம் கொடுத்தார். தொடர்ந்து சுவாமி சன்னதியில் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் கோயில் இணை கமிஷனர் கல்யாணி மற்றும் கோயில் பணியாளர்கள், ஏராளமான பக்தர்கள் லிங்க பிரதிஷ்டை திருவிழாவில் பங்கேற்று சுவாமி, அம்பாள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி ரதவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Tags : Hanuman Hanuman ,Ramalinga ,
× RELATED வடலூர் சத்திய தருமச்சாலை 158வது ஆண்டு தொடக்க விழா