×

பணத்துடன் தலைமறைவு நகைக்கடை அதிபர் மீது எஸ்பி.யிடம் மக்கள் புகார்

ராமநாதபுரம், ஜூன் 13:  பரமக்குடியைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் நகைகளுடன் தலைமறைவானதாக பாதிக்கப்பட்ட  பொதுமக்கள் எஸ்பி.யிடம் புகார் தெரிவித்தனர். பரமக்குடி வைசியர் தெருவில் நகைக்கடை வைத்திருந்தவர் பிச்சைமணி. இவரது கடையில் வழிமறிச்சான்பட்டி, பாம்பு உளுந்தான், ஆலிமருதை, நகரகுடி உள்ளிட்ட கிராமத்து பொதுமக்கள் நகைகளை செய்யவும், பழைய நகைகளை புதுப்பிக்கவும் கொடுத்திருந்தனர். இந்நிலையில், பிச்சைமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென கடையைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

இதனால், நகை செய்ய பணம் தந்தவர்கள், பழைய நகையை புதுப்பிக்கத் தந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிச்சை மணி குறித்து பரமக்குடி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் வழிமறிச்சான்பட்டியைச் சேர்ந்த லோகநாதன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் பிச்சை மணி மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது நகை, பணத்தை மீட்டுத்தருமாறு ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட எஸ்பி  அலுவலகத்தில்  புகார் அளித்தனர்.

இதுகுறித்து லோகநாதன் கூறுகையில், பிச்சை மணி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடை கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் திடீரென கடை அடைத்து விட்டு குடும்பத்துடன் தலைமைறைவாகி விட்டார். நகையை பறிகொடுத்த நிலையில் தவித்து வருகிறோம். இதுகுறித்து கடந்த மாதம் பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். தற்போது எஸ்பி யிடம் புகார் அளிக்க வந்துள்ளோம். நாங்கள் விவசாயம், கூலித்தொழில் செய்து பிழைத்து வருகிறோம். சிறுக, சிறுக சேர்த்து வைத்த பணத்தை வைத்து நகை வாங்கிய இழந்துள்ளால் கவலையடைந்துள்ளோம்’ என்றார்.

Tags : SPS ,
× RELATED போன் ஒட்டுக் கேட்ட வழக்கு தெலங்கானாவில் மாஜி போலீஸ் அதிகாரி கைது