×

சட்ட விழிப்புணர்வு முகாம்

தொண்டி, ஜூன் 12:  தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் ராமநாதபுரம் மாவட்ட சட்ட பணிகள் குழு மற்றும் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழு இணைந்து அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட சட்ட பணிகள் குழு செயலாளர் நீதிபதி ராமலிங்கம் தலைமை வகித்து தொழிலாளர்களுக்குரிய சட்டம் குறித்து விளக்கமாக பேசினார்.

தொழிலாளர் சமூக நலத்திட்ட உதவி ஆணையர் சங்கர் முன்னிலை வகித்தார். மத்திய அரசின் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஓய்வு ஊதியம் பெருவது எப்படி, சட்டத்தின்படி தங்கள் குறைகளை போக்குவது குறித்தும் வழக்கறிஞர்கள் சசிகுமார், வேலாயுதம் பேசினர். வட்ட சட்ட பணிகள் குழு இளநிலை உதவியாளர் லோகநானம், கோட்டைச்சமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Camp ,
× RELATED ஈர நில பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்