×

மாநில கிரிக்கெட் போட்டி துவக்கம்

ராமநாதபுரம், ஜூன் 7: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான 19 வயதுக்குட்பட்டோருக்கான ‘எப்’ பிரிவு கிரிக்கெட் போட்டிகள் ராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியிலும், சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கிலும் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் போட்டியில் ராமநாதபுரம்,ஈரோடு, நீலகிரி திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. மூன்று நாட்கள் நடைபெறும் லீக் போட்டியில் நீலகிரி மற்றும் ஈரோடு அணிகள் செய்யதம்மாள் பொறியில் கல்லூரி மைதானத்தில் விளையாடின. இதில் திருச்சி அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் ராமநாதபுரம் அணி ஈரோடு அணியை தோற்கடித்தது. அடுத்த போட்டி நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.

Tags : State cricket tournament ,
× RELATED மாநில கிரிக்கெட் போட்டி