×

கமுதியில் கிரிக்கெட் போட்டி வெற்றி அணிக்கு பரிசு

கமுதி, ஜூன் 7: கமுதியில் மேட்டுத் தெரு மருதுவாரியர்ஸ் மற்றும் மேட்டுத் தெரு கிரிக்கெட் கிளப் இணைந்து கிரிக்கெட் போட்டி நடத்தியது. இதில் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. 4 நாட்கள் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் மீனங்குடி அணியினர் முதல் பரிசை பெற்றனர். இவர்களுக்கு சுழற்கோப்பையும், ரூ/15 ஆயிரம் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம்பெற்ற மேட்டுத் தெரு மருதுவாரியர்ஸ் அணிக்கு சுழற்கோப்பையும் ரூ.12 ஆயிரமும்,. 3ம் பரிசை முனீஸ்வரன் அணியினர் பெற்றனர். ஆட்ட நாயகன், தொடர் நாயகன், சிறந்த சுழற்பந்து வீச்சாளர் போன்றோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், தமிழக தலைமை அகமுடையார் சங்க மாநில துணைத் தலைவர் நாராயணமூர்த்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பரிசுகளை வழங்கினர்.

Tags : cricket match win ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை