×

கண்டமான அரசு பஸ்களால் பயணிகள் அவதி

ராமநாதபுரம், ஜூன் 7:  ராமநாதபுரம் அரசு போக்குவரத்து டவுன் பஸ் கிளையிலிருந்து தினமும் 52க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் ராமநாதபுரத்தை சுற்றி பல கிராமங்களுக்கு காலை முதல் இரவு வரை செல்கின்றன. நகர் பகுதியில் இயக்கப்படும் பல பேருந்துகள் கண்டமான நிலையில் உள்ளதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு நடுரோட்டில் நிற்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் பஸ் பழுதடைந்தால் காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது. நேற்று காலை 7.30 மணிக்கு பழைய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு நத்தம் வரை செல்லும் 11ம் நம்பர் அரசு பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி புறப்பட்ட நிலையிலேயே ரேடியேட்டர் பழுதடைந்து விட்டது,

உடனே பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் தொடர்ந்து ஓட்ட முடியாத நிலையில், மதுரை ரோட்டில் உள்ள அரசு பணிமனையில் நிறுத்தினார். பின்னர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று பஸ் மூலம் பயணிகள் அனுப்பிக்கப்பட்டனர்.
பயணி ஒருவர் கூறுகையில், பழுதடைந்த பஸ்களையே நகர் பகுதியில் இயக்குகின்றனர். புதிய பஸ்களை வெளியூர்களுக்கு அனுப்பி விடுகின்றனர். வெளியூர் செல்லும் பயணிகள் மட்டும் தான் கட்டணம் செலுத்துகின்றனரா. கிராமத்திற்கு பஸ் சேவை முறையாக வழங்கினால் தான் மக்களிடத்தில் அரசுக்கு கெட்ட பெயர் வராது என்றார்.

Tags : Passengers ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்