×

நவீன வசதியுடன் கூடிய கழிப்பறை கட்டிடம் திறப்பு ஹெல்த் கிளினிக், நாப்கின் இயந்திரம் வசதி கருணாநிதி பிறந்தநாள் விழா

திருச்சி, ஜூன் 4:மறைந்த திமுக தலைவர் கருணாநிதி 96வது பிறந்தநாள் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதியின் உருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் கே.என்.நேரு உத்தரவின்பேரில் பகுதி செயலாளர்கள் கண்ணன், இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் வட்ட செயலாளர்கள் பாலமுருகன், மாருதி கண்ணன், பால்ராஜ், வண்ணை மோகன் உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.

அதுபோல் மாநகர் மற்றும் மாவட்டங்களில் கருணாநிதியில் பிறந்தநாளை முன்னிட்ட கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கட்சியினர் மரியாதை செலுத்தினர். மேலும் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் நலத்திட்டங்கள் வழங்கியும் கருணாநிதியின் பிறந்தநாளை கட்சியினர் கொண்டாடினர்.

துறையூர்: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு துறையூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாசிலைக்கு மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் தலைமையில் துறையூர் நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியார் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.

திருவெறும்பூர்: காட்டூர் பகுதிகளுக்குட்ட பல்வேறு பகுதியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் எம்எல்ஏ சேகரன் திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினார். தா.பேட்டை: முசிறி கைகாட்டியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா முசிறி நகரசெயலாளர் சிவகுமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. தா.பேட்டை கடை வீதியில் நடைபெற்ற மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவிற்கு திமுக நகர செயலாளர் தக்காளி தங்கராசு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சேகரன் இனிப்புகள் வழங்கினார்.

மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. எதுமலை பிரிவு ரோடு பகுதியில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து  இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, ஒன்றிய செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Comfortable Toilet Building Opening Health Clinic ,Napkin Engine Facility Karunanidhi Birthday Celebration ,
× RELATED நவீன வசதியுடன் கூடிய கழிப்பறை...