×

கிருஷ்ணகிரியில் ஐவிடிபி பணியாளர்களுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரி, ஜூன் 4: கிருஷ்ணகிரியில் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், ஐவிடிபி பணியாளர்களுக்கு சுயதொழில் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியன் வங்கி ஊரக வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் இந்தியன் வங்கி மூலம் சுயவேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் தர்மபுரி மாவட்ட திட்ட இயக்குநர் அரவிந்தகுமார், கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட இயக்குநர் ராமஜெயம் ஆகியோர் கிருஷ்ணகிரி ஐவிடிபி நிறுவன தலைவர் குழந்தை பிரான்சிஸிடமிருந்து அனுமதி பெற்று, ஐவிடிபி நிறுவன பணியாளர்களுக்கு சுயவேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியினை ஐவிடிபி நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் தொடங்கி வைத்தார். இதில், இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் திட்ட இயக்குனர்கள் பங்கேற்று, பெண்களுக்கு தையல் கலையில் அடிப்படை பயிற்சி, மேம்பாட்டுப் பயிற்சி, அழகு கலைப்பயிற்சி, கணினி பயிற்சி, காகிதப் பை தயாரிப்பது, ஆண்களுக்கு செல்போன் பழுது பார்த்தல், டிவி, பிரிட்ஜ், கணினி பழுது பார்த்தல் பயிற்சி, சிசிடிவி கேமரா பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் பயிற்சி வழங்கப்படுகிறது.  

மேலும், கிராமப்புற ஏழை பெண்கள், ஆண்கள் பயனடையும் வகையில், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பயிற்சிகள் நடத்தப்படுகிறது. பயிற்சிக்கான முழு செலவையும் இந்தியன் வங்கியே ஏற்றுக்கொண்டு, பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றனர். இதில் 300க்கும் மேற்பட்ட ஐவிடிபி பணியாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

Tags : IVDP ,Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்