×

ரம்ஜான் பண்டிகைக்கு தடையில்லாத மின்சாரம்

பரமக்குடி, ஜூன் 4: ராமநாதபுரம் மாவட்டத்தில் ரம்ஜான் அன்று தடையில்லாத மின்சாரம் வழங்கவேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளர் ஆலாம் வெளியிட்ட அறிக்கையில், முஸ்லிம்களின் 27வது நோன்பு சிறப்பு இரவு மற்றும் நோன்பு பெருநாள் அன்று தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் என்று கலெக்டர் மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று கடந்த 27வது நோன்பு சிறப்பு இரவு அன்று மாவட்ட நிர்வாகம் தடையில்லாத மின்சாரம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.மேலும் 5 அல்லது 6ம் தேதிகளில் பிறை பார்த்தவுடன் ரம்ஜான் கொண்டாடப்படும். அன்றை தினத்தின் முந்தை இரவில் அன்றைய தினமும் முழுமையாக தடையில்லாத மின்சாரம் வழங்க கலெக்டர் மற்றும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : festival ,Ramzan ,
× RELATED திண்டுக்கல் அருகே நீர் திறக்கக் கோரி...