×

டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

தொண்டி, ஜூன் 4: தொண்டி அருகே நள்ளிரவு ஒன்றன் பின் ஒன்றாக வந்த டூவீலர்கள் மோதிக் கொண்டதில் வாலிபர் ஒருவர் பலியானார். இதுகுறித்து போலீசார் லிசாரித்து வருகின்றனர். தொண்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் முகமது யாசின் (20). இவரும் இதே ஊரை சேர்ந்த முகம்மது ஷேக் அப்துல்லாவும் இரண்டு டூவீலரில் ஒன்றன் பின் ஒன்றாக சென்றுள்ளனர்.

மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடி வளைவில் ஷேக் அப்துல்லாவின் டூவீலர் யாசின் டூவீலர் மீது மோதியுள்ளது. இதில் யாசின் பனை மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயங்களுடன் ஷேக் அப்துல்லா ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தொண்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : youngster ,tweeter crash ,
× RELATED உயிருடன் மீனை விழுங்கிய வாலிபர்...